மூடு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிபர் மற்றும் கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு செயற்கைகால் அளவு எடுக்கும் முகாம் கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. போலியோ ஹோம் வளாகத்தில் 19.02.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச. விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2023

செ.வெ.எண்:-31/2023

நாள்:-14.02.2023

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிபர் மற்றும் கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு செயற்கைகால் அளவு எடுக்கும் முகாம் கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. போலியோ ஹோம் வளாகத்தில் 19.02.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச. விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிபர் மற்றும் கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு செயற்கைகால் அளவு எடுக்கும் முகாம் கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. போலியோ ஹோம் வளாகத்தில் 19.02.2023 (ஞாயிற்றுகிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னையைச் சேர்ந்த Freedom Trust எனும் தனியார் நிறுவனம் மூலம் நடைபெறவுள்ளது.

எனவே, கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிபர் மற்றும் கால் துண்டிக்கப்பட்ட செயற்கைகால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. போலியோ ஹோம் வளாகத்தில் 19.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் முகாமில் தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2) கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்:0451-2460099-ல் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.