மூடு

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்வளர்ச்சித்துறையால் 7.08.2019 அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 08/08/2019
1

செ.வெ.எண்:23/2019 நாள்:08.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைச்செய்தி

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்வளர்ச்சித்துறையால் 7.08.2019 அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

“வெல்லட்டும் தமிழ்” என்னும் தலைப்பில் கவதைப் போட்டியும், “இனியொரு விதி செய்வோம்” என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றன. முப்பது தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டி பொறுப்பாளராக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககக் கண்காணிப்பாளர் திருமதி.ந.ஜோதிலட்சமி செயல்பட்டார்.

கவிதைப் போட்டியில் கன்னிவாடி மு.ரெ.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ச.மோகனபிரியதர்சினி முதல் பரிசும், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர் ந.சீனிவாசன் இரண்டாம் பரிசும், நத்தம் கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ர.சந்தோஷ்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

கட்டுரைப்போட்டியில் திண்டுக்கல் அண்ணாமலையார் ஆலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தா.காருணியா முதல் பரிசும், இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தி.ஹர்ஷவர்தினி இரண்டாம் பரிசும், சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் ம.சுஜா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

பேச்சுப்போட்டியில் சிலுக்குவார்பட்டி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜா.கவின்வாரா முதல் பரிசும், திண்டுக்கல் புனித லூர்தன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி உ.நவிஸ்பாத்திமா இரண்டாம் பரிசும், திண்டுக்கல் அண்ணாமலையார் ஆலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ச.சரண்யா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

இவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000/-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7,000/-மும், மூன்றாம் பரிசாக 5,000/-மும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் வழங்கினார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.