திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயிலில் திண்டுக்கல் மாவட்ட அறங்காவலர்குழு பதவிஏற்பு விழா நடைபெற்றது
செ.வெ.எண்:-50/2023
நாள்: 23.02.2023
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயிலில் திண்டுக்கல் மாவட்ட அறங்காவலர்குழு பதவிஏற்பு விழா நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் திண்டுக்கல் மாவட்ட அறங்காவலர்குழு பதவிஏற்பு விழா இன்று(23.02.2023) நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராக திரு.ம.சுப்பிரமணியன் அவர்களும், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக திரு.வி.எம்.எ.கருமலை பாண்டியன், திரு.ம.குமரேசன், திருமதி.எம்.கே.ரேவதி மற்றும் திரு.சி.பாக்கியராஜ் அவர்களும் பதிவியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி ஜெ.இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள், திண்டுக்கல் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி ப.பாரதி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.வே.சுரேஷ் அவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.