மூடு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2022
.

செ.வெ.எண்:-23/2022

நாள்:09.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று(09.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் , பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

.

.

பின்னர் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துஐற கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் பணியாளர்கள், அர்ச்சகர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதற்கான கருத்துரு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திருக்கோயில்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.பழனி கோயில் ரோப்கார் கட்டணம் குறைப்பது தொடர்பாக 2-வது ரோப்கார் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் சாத்தியக்கூறுகள் இருப்பின் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கோயில்களில் அறங்காவலர் நியமனம் செய்வது, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி வழிகாட்டுதல் குழு அமைத்து, அந்த குழு பரிந்துரையின்பேரில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.பழனி மலைக்கோயில் அருகில் உள்ள இடும்பன்மலையை மேம்படுத்துவது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.பழனியில் உள்ள கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்குவது தொடர்பாக அங்குள்ள கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, சாத்தியக்கூறுகள் இருப்பின் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.காப்பகத்தில் உள்ள பழனி கோயில் சிலையை கொண்டுவர, நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் கோயிலுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரும் தங்க ஆபரணங்களை பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்து, மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான தங்கம் உருக்கும் தொழிற்சாலையில் உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வைப்புநிதியாக மாற்றப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பரம்பரை அரங்காவலர்கள் உள்ள திருக்கோயில்களில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்முறையாக இறுக்கண்குடி மாரியம்மன் கோயில் காணிக்கை தங்கம் 27.600 கிலோ பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பெரியபாளையம் பவானியம்மன் கோயில் தங்கம் பிரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மற்ற திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமித்து அவர்கள் ஆலோசனைப்படி தங்கம் பிரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ஓய்வுபெற்ற நீதியரசர்கள் திருமதி மாலா, திரு.ராஜு, திரு.சந்திரபாலு மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆலோசித்து தங்கம் பிரிப்பு பணிகள் மேற்கொள்வர். அதன்படி, பழனி திருக்கோயிலில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இங்கு காணிக்கையாக வந்த தங்கம் பிரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

.

.

பழனி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சீதபந்தன மருந்து சாத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, ஆகம விதிப்படி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் சுமார் 44,000 திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 530 திருக்கோயில்கள் மட்டுமே வருவாய் உள்ள பெரிய திருக்கோயில்கள். பெரிய திருக்கோயில்களில் கூட வருமானத்தில் 25 சதவீதம் தான் பராமரிப்பு மற்றும் பணியாளர் சம்பளம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். எனவே, பழனியில் புதிய ரோப்கார் அமைக்கப்பட்ட பின்னர் அதற்கான கட்டணம் குறைப்பு குறித்து ஆலோசித்து சாத்தியக்கூறுகள் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பழனியில் சித்தா மருத்துவக்கல்லூரி விரைவில் அமைக்கப்படும். அதற்கு முன்னதாக சித்தா மருத்துவமனை உடனடியாக அமைக்கப்படும். அதனைத்தொடர்ந்து கல்லூரி தொடங்குவுதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். பழனி திருக்கோயிலை பொறுத்தவரை பாலித்தீன் பைகள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி மஞ்சள் பை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும். இவ்வாறு மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம் கொத்தப்புள்ளி அருள்மிகு கதிர் நரசிங்கப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள், ஒட்டன்சத்திரம் அருகே அரசப்பிள்ளைப்பட்டியில் உள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் ஆகிய இடங்களில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் விளையாட்டு மைதாயத்தினை சுற்றி ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணிக்கு மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, மாணவி, மாணவிகளுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார்.

.

.

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையாளர் திருமதி பா.பாரதி, பழனி திருக்கோயில் இணை ஆணையர் திரு.நா.நடராஜன், உதவி ஆணையர்கள் திருமதி தி.அனிதா, திரு.இரா.செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.