மூடு

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி, பெரியகோம்பை, முத்துப்பாண்டி திருக்கோயில் பகுதியில் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 04/05/2022
.

செ.வெ.எண்:-04/2022

நாள்:02.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி, பெரியகோம்பை, முத்துப்பாண்டி திருக்கோயில் பகுதியில் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி, பெரியகோம்பை, முத்துப்பாண்டி திருக்கோயில் பகுதியில் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.பிரபு,இ.வ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

பொதுமக்களை தாக்கி, விவசாய நிலங்களின் பயிர்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை விரட்டி பிடிக்க கொண்டு வரப்பட்டுள்ள கும்கி யானைகள் கலீம், சின்னத்தம்பி ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டார். தொடர்ந்து, அங்குள்ள வன அலுவலர்கள், யானை பாகனிடம் யானையை பிடிக்கும் பணிகளை விரைந்தும், மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு விரைவாக இப்பணியை செய்து முடித்தால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உங்களுக்கு என்ன உதவிகள் தேவையோ, அனைத்து உதவிகளும் செய்யப்படும். இப்பணியை சிறப்பாக முடித்தால் உங்களுக்கு பாராட்டு பரிசு வழங்கப்படும். மேலும், ஒற்றை யானையை விரைவில் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒற்றை யானையை பிடிக்கும் பணிகள் முடிக்கும் வரை, இப்பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, வனவர் திரு.முத்துமாணிக்கம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, முக்கிய பிரமுகர்கள் திரு.சண்முகம், திரு.ராஜா மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.