மூடு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து 167 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.68.20 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2021
.

செ.வெ.எண்:-15/2021

நாள்:07.08.2021

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
சிறப்பு கைத்தறி கண்காட்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்
துவக்கி வைத்து 167 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.68.20 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 7வது தேசிய கைத்தறி தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(07.08.2021) அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கைத்தறி கண்காட்சியினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, பார்வையிட்டு, கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்து முதல் விற்பனையை வழங்க, அதனை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார் மற்றும் வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) திருமதி சந்தனமேரி கீதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கண்காட்சியில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், செயற்கைப்பட்டு சேலைகள், பாரம்பரிய வுநை ரூ னுலந காட்டன் சேலைகள், கோரா காட்டன் சால், கைலிகள், பெட்சீட், துண்டுகள், சர்டிங் ஆகிய கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 வீதம் 112 பயனாளிகளுக்கும், 35 பயனாளிகளுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.12.20 லட்சமும், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை 20 பயனாளிகளுக்கும் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூ.68.20 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் திரு.பி.வெங்கடேசலு, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் திரு.மாறன், துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் திருமதி என்.கவிதா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.