மூடு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 05/04/2022
.

செ.வெ.எண்:-05/2022

நாள்:04.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

.

.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (04.04.2022) நடைபெற்றது.தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 165 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.நீரில் மூழ்கி இறந்த திண்டுக்கல் கிழக்கு வட்டம், அடியனூத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தாய் திருமதி சீலா மற்றும் வேடசந்தூர் வட்டம், வே.புதுக்கோட்டையைச் சேர்ந்த அணைப்பிரபு என்பவர் தாய் திருமதி மகாலட்சுமி, பாம்பு கடித்து இறந்த ஒட்டன்சத்திரம் வட்டம், கள்ளிமந்தையத்தைச் சேர்ந்த கௌசல்யா என்பவருடைய கணவர் திரு.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த செல்வநாகமணி என்பவர் தாய் திருமதி பழனியம்மாள் ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

.

.

2021-2022-ஆம் ஆண்டிற்கான அரசுப்பணியாளர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஹரியானா மாநிலத்தில் 28.03.2022 முதல் 30.03.2022 வரை நடைபெற்றது. அதில், தமிழக அணியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வள ஆதாரத்துறையைச் சேர்ந்த வீர்கள் கலந்துகொண்டனர். அவர்களில், திரு.பி.கண்ணன்(நீர்வள ஆதாரத்துறை) 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். பி.கண்ணன் மற்றும் போட்டிகளில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை திரு.எம்.காட்டுராஜா, பள்ளிக்கல்வித்துறை திரு.ஏ.கண்ணன், திரு.இளங்கோவன் ஆகியோருக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.அதேபோல், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி மாணவிகள் எம்.ஜனனி, ஜெனிபர், எம்.அக்சயா, எம்.ஜோதிலட்சுமி ஆகியேர் தமிழக இளையோர் பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற 66வது தேசிய இளையோர் பூப்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டு தங்க கோப்பை வென்றனர். இதில் எம்.ஜனனி, எம்.அக்சயா ஆகியோர் நட்சத்திர வீரர் விருது பெற்றனர். மேலும், சீனியர் பிரிவில் எம்.ஜனனி, ஆர்.வான்மதி, எம்.அக்சயா ஆகியோர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 67வது தேசிய சீனியர் பூப்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வெள்ளிக்கோப்பை வென்றனர். இதில் எம்.ஜனனி நட்சத்திர வீரர் விருது பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

.

.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) திரு.சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி விஜயராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சௌ.சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி எம்.ரோஸ் பாத்திமா மேரி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.