மூடு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசுப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 07/05/2022
.

செ.வெ.எண்:-07/2022

நாள்:04.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசுப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாட்டில் புதிய அரசுப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய “ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.05.2022) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்று ஓராட்டு நிறைவடைவதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து அரசின் ஓராண்டு சாதனைகள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துறைக்க வேண்டும், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்க வேண்டும். இ-சேவை மேசைகள், எல்.இ.டி மின்னனு வாகனத்தின் மூலம் அரசின் சாதனை விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றங்கள், வணிகக்கடைகள் அமைக்கவும், உள்ளுர் கலைஞர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகள், மருத்துவம் முகாம், புகைப்படக் கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வழங்கப்படும் சாதனை கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறைகள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களுக்கு “ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் இந்த ஓராண்டு கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள்; அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இரா.அமர்நாத், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.பெருமாள்சாமி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமதி.ரா.மனோரஞ்சிதம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி புஷ்கலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.இளையேந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.