திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், வள்ளலார் முப்பெரும் விழாவானது, 12.02.2023 அன்று திண்டுக்கல் நகர், நாகல் நகர், பாரதிபுரம், அண்ணாமலையார் பள்ளி ரோடு, சௌராஷ்ட்ரா சபை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
செ.வெ.எண்:-23/2023
நாள்:09.02.2023
திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், வள்ளலார் முப்பெரும் விழாவானது, 12.02.2023 அன்று திண்டுக்கல் நகர், நாகல் நகர், பாரதிபுரம், அண்ணாமலையார் பள்ளி ரோடு, சௌராஷ்ட்ரா சபை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படியும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அறிவிப்பு 2022-2023-ன் படியும், உயிர்திரன் எல்லம் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும்(25.06.2022), வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (05.10.2022), ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும்(05-02-2023) சேர்த்து. திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், வள்ளலார் முப்பெரும் விழாவானது. 12.02.2023 அன்று திண்டுக்கல் நகர், நாகல் நகர், பாரதிபுரம், அண்ணாமலையார் பள்ளி ரோடு, சௌராஷ்ட்ரா சபை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழும் இவ்விழாவில் அருட்பெருஞ்ஜோதி ஞான தீபம் ஏற்றுதல், சமரச சுத்த சன்மார்க்க கொடி கட்டுதல், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தல், அருள்நெறி பரப்புரைப் பேரணி, இசை நிகழ்ச்சிகள், சிறப்புச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பெரியோர்களை கௌரவித்தல், கருத்தரங்கம் மற்றும் திருஅருட்பா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த இனிய விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் சன்மார்க்க பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மேற்படி விழாவினை சிறப்பிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி பாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.