மூடு

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 10/05/2022
.

செ.வெ.எண்:-19/2022

நாள்:09.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

2021-2022ம் நிதியாண்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்திற்கு ரூ.15இ09இ83இ637ஃ- நிதிஒதுக்கீடு பெறப்பட்டு செலவினம் மேற்கொள்ளப்பட்டது, 8293 பயனாளிகள் பயனடைந்தனர். மேலும், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.78,38இ314ஃ- மதிப்பில் 18 வகையான உபகரணங்கள் 545 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 39521 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு 39521 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாளஅட்டை வழங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட 29777 மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியாக உறுப்பினராக பதிவு செய்யப்பட்டது. 30 சிறப்பு முகாம்களின் மூலமும் 2807 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து முகாம்களிலும் 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3010 நபர்களுக்கு நலவாரிய பதிவு மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 39521 மாற்றுத்திறனாளிகளுக்கு 26456 ருனுஐனு விண்ணப்பங்கள் பெறப்பட்டு 19440 விண்ணப்பங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ருனுஐனு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்துப்பட்ட பெட்ரோல் ஸ்சுட்டர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயக்கும் சக்கர நாற்காலி ஆகிய உபகரணங்கள் வழங்குவதற்கான 2 நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 31ூ12ஸ்ரீ43 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ளுஅயசவிhழநெ (கைப்பேசி) வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்றோருக்கும், காதுகேளாத நபர்களுக்கும் 2 நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 224 பயனாளிகளுக்கு ளுஅயசவிhழநெ வழங்கப்பட்டது. சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 நாட்கள் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 106 நபர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 695 நபர்களுக்கு ரூ.237.76 இலட்சம் தொகையும், துசு ஊழு-ழுpநசயவiஎந மூலம் 213 நபர்களுக்கு ரூ.83.50 இலட்சம் தொகையும் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் 238 நபர்களுக்கு ரூ.210.86 இலட்சம் தொகையும் மொத்தம் 1162 நபர்களுக்கு 532.14 இலட்சம் தொகைகடன் வழங்கப்பட்டுள்ளது. மானியத் தொகைகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 நபர்களுக்கு ரூ.19,97,656 தொகை மானியம் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம ஊராட்சிகளில் மாகத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் அரசு கடைகள் ஏலம் விடும்போது மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதி செய்யப்படும். அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு படுக்கை புண் உள்ள நோயாளிகளுக்கு சிறப்பு படுக்கை (றுயவநச டீநன) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் தங்களது கேரிக்கைகளை வாட்ஸ்ஆப் (றூயவளயுpp) எண்:842842066 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க வேண்டும். வாட்ஸ்ஆப் மூலம் வரும் கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடன் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும். அனைத்துறை அலுவலர்களும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவி;த்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.வே.லதா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், வருவாய் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு. திரு.பிரேம்குமார், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) திருமதி.பாக்கியலெட்சுமி, அரசு மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர்.விஜயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெயசீலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.