மூடு

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை, விண்ணப்பிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2022

செ.வெ.எண்:-45/2022

நாள்:24.02.2022

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை, அதாவது பயிற்சியாளரின் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சியாளரின் தாய், தந்தை பெயர் திருத்தங்கள், பயிற்சி பெற்ற தொழிற்பிரிவின் பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்துகொள்ள 02.03.2022 தேதி வரையில் Grievance Portal-ல் விண்ணப்பிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பாகும். இதனை தொடர்ந்து வேறுஏதும் வாய்ப்பு வழங்கப்படமாட்டது.

எனவே அசல் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழில் திருத்தம் கோரும் முன்னாள் தொழிற்பழகுநர் பயிற்சியாளர்கள் தேவையான அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் (பத்தாம் வகுப்பு / பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து பெற்ற மாற்றுச்சான்றிதழ்(TC), ஆதார்கார்டு, அண்மையில் எடுத்த புகைப்படம் மற்றும் (Affidavit – புகைப்படம் திருத்தம் கோரும் பயிற்சியாளர்கள் மட்டும்) ஆகியவற்றுடன் 02.03.2022 வரை திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுதொடர்பான விவரங்களை 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.