மூடு

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ள பண பரிமாற்றத்தை கண்காணித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, வங்கியாளர்கள் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2019

செ.வெ.எண்:-19/2019 நாள்:-14.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ள பண பரிமாற்றத்தை கண்காணித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, வங்கியாளர்கள் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து வங்கியாளர்களின் மாவட்ட பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களின் மாவட்ட பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (14.03.2019) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளதால் வங்கிகளில் தனிநபரின் வங்கி கணக்கில் இருந்து சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பரிவர்த்தனை இருந்தால் அது குறித்து அறிக்கையினை தினமும் அனைத்து வங்கியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், சந்தேகத்திற்கு இடமான பணவரவு (Cash Deposit) குறித்தும் விளக்கம் அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கியில் ரூ.1 இலட்சத்திற்கும் மேல் கூடுதலாக வங்கியில் பணம் எடுப்பவர்களின் தகவல்களை வங்கியாளர்கள் அளிக்க வேண்டும். மேலும், அந்தந்த வங்கிகளின் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்க கொண்டு செல்லும் பொழுது, அத்தொகைக்குரிய சரியான விபரங்கள் வங்கிகள் மூலமாக அளி;க்கப்பட வேண்டும். பணம் கொண்டு செல்லும் முகவர்களின் (Agency) முழு தகவல்கள் மற்றும் வாகனங்களின் எண்கள் குறித்த விபரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வங்கியாளர்கள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.10 இலட்சத்திற்கு மேற்பட்ட பணபரிவர்த்தனை குறித்து கண்காணிக்க வருமானவரித்துறை மூலமாக ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer) நியமிக்கப்பட்டு கண்காணிக்கபடவுள்ளது.

மேலும்; ஒரு வங்கி கணக்கில் இருந்து பல நபர்களின் வங்கி கணக்குகளில் தொகையை வழக்கத்திற்கு மாறாக மாற்றுதல் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றங்களை அனைத்து வங்கிகளின் கிளைகளைச் சார்ந்த வங்கியாளர்கள் கண்காணித்து, தினசரி அறிக்கையினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அவர்களிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சந்திரசேகரன் மற்றும் அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.