மூடு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2020

செ.வெ.எண்:-06/2020

நாள்:08.09.2020

திண்டுக்கல் மாவட்டம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2020-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை :

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற் பயிற்சி நிலைங்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணைதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டண தொகையான ரூ.50/- விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / G-Pay வாயிலாக செலுத்தலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்: 16.08.2020

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 15.09.2020

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இத்தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படின், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், நத்தம் மெயின் ரோடு, குள்ளனம்பட்டி, திண்டுக்கல் அவர்களை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு 0451 – 2471412, 0451 – 2471411 மற்றும் 8870282856, 9789162163, 9789789927, 8667488482, 8248047166, 9791421415 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.