நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்கள் மூன்றாம் சுழற்சி அடிப்படையில் நியமனம்

செ.வெ.எண்:-39/2022
நாள்:17.02.2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்கள் மூன்றாம் சுழற்சி அடிப்படையில் நியமனம் – மாவட்ட தேர்தல் பார்வையாளர் / அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 747 வாக்குச்சாவடிகள் உறுதி செய்யப்பட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பதவியிடங்களுக்கான 10 வாக்குச்சாவடிகள் போக 737 வாக்குச்சாவடிகளில் 19.02.2022 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்திடும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் / அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(17.02.2022) அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மூன்றாம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் 17.02.2022 அன்று மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு மூன்றாம் சுழற்சி அடிப்படையில் கீழ்க்கண்ட விபரப்படி வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வ.எண் | உள்ளாட்சி அமைப்பின் விபரம் | வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை | நியமனம் செய்யப்பட்ட வாக்குப்பதிவு அலுவலரின் எண்ணிக்கை (இருப்பும் சேர்த்து) |
1. | மாநகராட்சி – 1 | 183 | 880 |
2. | நகராட்சிகள் – 3 | 140 | 692 |
3. | பேரூராட்சிகள் – 23 | 414 | 2040 |
மொத்தம் | 737 | 3612 |
மேற்கண்ட அட்டவணையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 737 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணிக்காக 3612 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களைக் கொண்டு 19.02.2022 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.