மூடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 19/02/2022
.

..

செ.வெ.எண்:-41/2022

நாள்:- 18.02.2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கும் கொண்டு செல்லும் பணி இன்று(18.02.2022) மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் வாக்குப்பதிவுக்கு தயார்படுத்தப்பட்டன.

பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் கேமரா(சிசிடிவி கேமரா)/நுண்பார்வையாளர் /இணையதள கண்காணிப்பு(Web Streaming) ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இணையதள கண்காணிப்பு(Web Streaming) மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதையடுத்து வாக்குச்சாவடி மையங்கள் தயார்நிலையில் இருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.02.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திண்டுக்கல் மாநகராட்சியில் கென்னடி நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வந்து சேர்ந்ததையும், வாக்குப்பதிவு அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வந்து சேர்ந்ததையும், வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது போன்ற அனைத்து வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உறுதி செய்தார்கள்.

இவ்வாய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.