மூடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 09/11/2021
.

செ.வெ.எண்:-16/2021

நாள்:08.11.2021

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (08.11.2021) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டு, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச்சாவடிகளும், கொடைக்கானல் நகராட்சியில் 38 வாக்குச்சாவடிகளும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 34 வாக்குச்சாவடிகளும், பழனி நகராட்சியில் 71 வாக்குச்சாவடிகளும், 23 பேரூராட்சியில் 421 வாக்குச்சாவடிகள் என திண்டுக்கல் மாவட்டத்தில் 747 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமதி.ரா.மனோரஞ்சிதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி.மு.ராணி, நகராட்சி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் (தேர்தல்) பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியின் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.