மூடு

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி விழிப்புணர்வு பணியை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2019
elec12

e7 e6 e5 e4 e3 e2

செ.வெ.எண்:- 18/2019 நாள்:-14.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி விழிப்புணர்வு பணியை தொடங்கி வைத்தார்.

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (14.03.2019) திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக வேண்டும் என்பதை வழியுறுத்தி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் அமைத்தும், ஒட்டுவில்லை ஒட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்றைய தினம் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் அரசு அலுவலக வாகனங்கள் ஆகியவைகளில், வாக்காளராக இருப்பது பெருமை, வாக்களிப்பது நமது உரிமை, உங்கள் உரிமை ஓட்டுரிமை, உங்களது எதிர்காலத்தின் குரல் உங்கள் வாக்கு என்று பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய வாக்காளர்கள் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு, ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளிடம் தேர்தல் நாளான ஏப்ரல்-18ந் தேதி அன்று தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளுக்கு எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு, எரிவாயு விநியோக நிறுவனஙகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளும் ஒட்டப்பட்டு, சிலிண்டர் விநியோகிக்கும் நபர்கள் அந்தந்த வீடுகளில் வாக்களிப்பது அவசியம் குறித்தும் எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, இளைய தலைமுறைகளிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் 100 சதவீதம் பெற்றோர்கள் வாக்களிப்போம் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விண்ணப்ப படிவங்களை வழங்கியும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் நமது உரிமை என்பதை உணர்ந்து, நேர்மையான முறையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து, நம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஷேக்அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.ஜீவா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த், பொது மேலாளர் (த.அ.போ.க) திரு.ராஜேஷ்வர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்