மூடு

நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/08/2019
1

செ.வெ.எண்:70/2019 நாள்:28.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை இன்று (28.08.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சி;த்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் மற்றும் மழை நீரினை பாதுகாப்பதன் அவசியம் கருதி நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கண்மாய்கள் மற்றும் குளங்களை தூர்வாரும் பணியினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்;டுள்ளார்.

குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகளின் மதிப்பீடு ரூ.10 இலட்சங்களுக்கு கீழ் உள்ள பணிகள் அந்த பாசன சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசன சங்கம் இல்லாத இடங்களில் முன்னோடி விவசாயிகள் மூலம் நியமன முறையில் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படும். இப்பணிகளுக்கு விவசாயிகளின் பங்களிப்பாக மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் தொகையினை தொழிலாளர்கள் வடிவத்திலோ அல்லது பொருளாகவோ அல்லது ரொக்க பணமாகவோ செலுத்திட வேண்டும்.

இத்திட்டத்தின்படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்நத்தம் ஊராட்சி செங்கன்குளம் கண்மாயில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலும், காந்தி கிராமம் ஊராட்சி செட்டி குளத்தில் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலும், அம்பாத்துரை ஊராட்சி ஐ.பி நகர் மயான ஊரணியில் ரூ.99.500 மதிப்பீட்டிலும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலுக்குவார்பட்டி ஊராட்சி புலாம்பட்டி குளத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திருப்பதி செட்டிகுளம் ரூ. ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிருலும், கூவணூத்து ஊராட்சி வலாங்;கோட்டை புதுக்குளம் கண்மாய் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நக்கனூத்து அக்கரைபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும்; அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும், வருகை பதிவேடு, புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், நியாயவிலை கடையின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்தும், இருப்புகள் குறித்தும், பதிவேடுகள் குறித்தும், ஸ்மார்ட் கார்டு பதிவுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கோட்டூர் ஊராட்சி சமத்துவபுரம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் நாற்று பண்ணை வளர்ப்பு பணிகளையும், மாட்டு தீவனம் (அசோலா) உற்பத்தி மையத்தினையும், திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின்கீழ் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அ.சீத்தாராமன், திரு.அ.சுப்பிரமணி,; திரு.டி.லாரன்ஸ், திரு.எம்.செல்வராஜ், துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.