மூடு

நிலக்கோட்டை வட்டாரம் மற்றும் வத்தலகுண்டு வட்டாரம் ஆகிய இடங்களில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தங்கம் வழங்கும் பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 08/04/2022

செ.வெ.எண்:-21/2022

நாள்:08.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை வட்டாரம் மற்றும் வத்தலகுண்டு வட்டாரம் ஆகிய இடங்களில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தங்கம் வழங்கும் பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம் மற்றும் வத்தலகுண்டு வட்டாரம் ஆகிய இடங்களில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மிக முக்கியமான நோக்கமாக கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படுகிறது. இத்துறையில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் மூன்றாம் பாலினர்களுக்காக பல திட்டங்களும், சட்டங்களும், செயல்பாட்டில உள்ளது. மேலும், ஏழை பெறறோர்கள் தன் மகளின் திருமணத்திறாகாக தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது.அதன்படி, இன்றையதினம் நிலக்கோட்டை வட்டாரத்தில் மொத்தம் 248 பயனாளிகளுக்கு ரூ.93.70 இலட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.98.50 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி, வத்தலகுண்டு வட்டாரத்தில் 201 பயனாளிகளுக்கு ரூ.75.94 இலட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.82.50 இலட்சம் மதிப்பிலான நிதியுதவி; வழங்கும் பணி திண்டுக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்றது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி புஷ்பகலா, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி ரெஜினாநாயகம், துணைத்தலைவர் திரு.யாகப்பன், நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி குணவதி, திருமதி செல்வம், திருமதி ராஜவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.