மூடு

நெருக்கடிகால மேலாண்மை (Crisis Management Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2020
crisis

செ.வெ.எண்:-41:2020 நாள்:31.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெருக்கடிகால மேலாண்மை (Crisis Management Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

————————————————————————————————————————————-

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31.03.2020) தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெருக்கடிகால மேலாண்மை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுத்திட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, பல்வேறு அறிவுரைகளை வழங்கி அதனை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.

மாவட்டம் தோறும் நெருக்கடிகால மேலாண்மைக்குழு ஏற்படுத்தி கொரோனா நோய் பரவாமல் தடுத்திடவும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகவும், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்;ட இயக்குநர், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ஆகிய அரசு சார்ந் அலுவலர்கள் மற்றும் தொழில் வர்த்தகசபை, தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள், மருத்துவ வல்லுனர்கள், மருந்துக தயாரிப்பாளர்கள், வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த முகவர்கள், உணவு தயாரிப்பாளர்கள், அதன் விநியோகஸ்தர்கள், அரசுசார அமைப்பினர், நுகர்வோர் பிரதிநிதிகள் ஆகிய அரசு சாரா உறுப்பினர்களை கொண்ட நெருக்கடி கால மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, தேவை மற்றும் அவசியம் ஏற்படும் போது கூடி நெருக்கடி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவார்களாக 884 நபர்கள் கண்டறியப்பட்டு, அவரவர் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவத்துறையின் மூலம் கண்காணித்து அலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் அத்தியவாசிய தேவையினை பூர்த்தி செய்யும் வண்ணம் பொருட்களை வழங்கிட 924 நிறுவனங்களும், காய்கறி விற்பனை செய்ய 28 கடைகளும், தோட்டக்கலைத்துறை வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்ய 6 நபர்களும், கூட்டுறவுத்துறையின் மூலம் 2 நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. காய்கறி, பழம், முட்டை போன்றவற்றை ஒரு இடத்திருந்து பிறிதொரு இடத்திற்கு எடுத்து செல்லும் பொருட்டு கிராம நிர்வாக அலுவலர்களால் 614 நபர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

(2)
அத்தியவாசிய தொழில் பயன்பாட்டிற்காக அனுமதி சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, உணவு வழங்குவதற்கு 10 அனுமதி சீட்டும், அத்தியாவசிய பொருட்களுக்கு 970 அனுமதி சீட்டு, மருந்து பொருட்களுக்கு 20 அனுமதி சீட்டு, இதர வகையில் 140 என மொத்தம் 1040 அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

புதியதாக வாகன அனுமதி சீட்டினை பெற சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் துணை வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெறலாம். பொதுமக்கள் கூட்டமாக வந்து பொருட்களை வாங்குவதை தவிர்த்திடவும், சமூதாய இடைவெளியினை கடைபிடித்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் பின்பற்றி ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர்(பொ) திரு.ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.கவிதா, மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.பாஸ்கரன், மருத்துவ அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வணிக நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-