மூடு

பழனியில் ரூ.22.20 கோடி மதிப்பில் 2,818 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் வழங்கி ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான 20 வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட தேதி : 02/08/2022
.

செ.வெ.எண்:-06/2022

நாள்:01.08.2022

திண்டுக்கல் மாவட்டம்

பழனியில் ரூ.22.20 கோடி மதிப்பில் 2,818 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் வழங்கி ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான 20 வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அங்காள பரமேஸ்வர திருமண மண்டபத்தில் இன்று(01.08.2022) பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் 2,818 பயனாளிகளுக்கு ரூ.22.20 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான 20 வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர். கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசின் நலத்திட்ட உதவிகள் அதிகபடியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலவச வீட்டுமனைப்பட்டா ஏழை எளிய மக்களுக்கு அதிகளவில் வழங்கப்டுகிறது. மேலும் அவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏழை எளிய தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாட்கோ, மாவட்ட தொழில் மையம், நீட்ஸ் உட்பட பலவிதமான தொழில் கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவிகள் அதிகளவில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அதிகளவிலான கூட்டுறவுத்துறை மூலம் கடன் என பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்பட்டு, நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

விழாவில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் அரசின் திட்டங்களை கொண்டுவந்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பழனியில் இன்றைய விழாவில், வருவாய்த்துறை சார்பில் 751 நபர்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 500 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை, 180 நபர்களுக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 63 நபர்களுக்கு உதவித்தொகை, சாலை விபத்து நிவாரண உதவித்தொகை 10 நபர்களுக்கும், பழங்குடியினர் சான்று 15 நபர்களுக்கும், உபரி நில பட்டா 159 நபர்களுக்கும், தேய்ப்பு பெட்டி 15 நபர்களுக்கு, இலவச தையல் இயந்திரம் 5 நபர்களுக்கு என மொத்தம் 1,688 நபர்களுக்கு ரூ.17.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்டுறவுத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் 500 நபர்களுக்கும், மத்திய வங்கி கிளைகள் வாயிலாக 92 நபர்களுக்கும் என மொத்தம் 592 நபர்களுக்கு ரூ.3.41 கோடி மதிப்பிலான கடனுதவிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட மருந்துகள் 30 நபர்களுக்கும், மருத்துவ காப்பீடு திட்டம் 50 நபர்களுக்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலவாரிய அடையாள அட்டை 154 நபர்களுக்கும், குளிரூட்டப்பட்ட பெட்டியுடன் நான்கு சக்கர வாகன மானியம் ஒரு நபருக்கும், குளிரூட்டப்பட்ட பெட்டியுடன் 2 சக்கர வாகன மானியம் 14 நபர்களுக்கும், இ-ஷரம் அட்டை(மீனவ கூட்டுறவு சங்கம்) 15 நபர்களுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் 50 நபர்களுக்கு ரூ.1.63 லட்சம் மதிப்பிலான இடுபொருள்கள் மற்றும் விவசாயக் கருவிகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 50 நபர்களுக்கு ரூ.1.95 லட்சம் மதிப்பிலான இடுபொருள்கள் மற்றும பழக்கன்றுகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ.2.35 லட்சம் மதிப்பிலான சூரிய உலர்த்தி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 138 பெண் குழந்தைகளுக்கு ரூ.34.50 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகள், சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் 10 குழந்தைகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகள், மாற்றுத்திறனாளிகள் நல்துறை சார்பில் 10 நபர்களுக்கு நலவாரிய அட்டை மற்றும் ரூ.12,000 மதிப்பில் உதவித்தொகை, கல்வித்துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ.49,700 மதிப்பில் இலவச மிதிவண்டிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.12.12 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள், 3 இடங்களில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைத்தல் பணிகள், பழனி நகராட்சிக்குட்பட்ட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி, பழனி நகராட்சி 30வது வார்டு, வெண்மணி நகரில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி, குழாயுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி, பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான 20 வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.22.20 கோடி மதிப்பில் பழன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,818 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் 20 வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பழனி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், பழனி நகராட்சித் தலைவர் திருமதி உமாமகேஸ்வரி, பழனி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி ஈஸ்வரி கருப்பசாமி, முக்கிய பிரமுகர்கள் திரு.சௌந்திரபாண்டியன், திரு.சாமிநாதன், பழனி வட்டாட்சியர் திரு.சசி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.