மூடு

பழனி வட்டத்திற்குட்பட்ட கலையம்புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2019
1

செ.வெ.எண்:68/2019 நாள்:27.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

பழனி வட்டத்திற்குட்பட்ட கலையம்புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திற்குட்பட்ட கலையம்புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை இன்று (27.08.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு துரித நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தின்கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறையின் சார்பில், நீர்நிலைகளை மறு சீரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளை சீரமைக்கும் பணி விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு, அப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின்கீழ், நங்காஞ்சியார் வடிநிலக்கோட்டம், பழனி கட்டுப்பாட்டில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதியில் மொத்த 45 பணிகள் ரூ.17.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதில் 6 கால்வாய்களில் தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி மதகுகளை சீர் அமைக்கும் பணிகள், 40 குளங்களில் வரத்து வாய்க்கால்களில் குளம் மற்றும் குளக்கரைகளில் செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல், மதகுகளில் உள்ள அடைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள்

மேற்கொள்ளளப்பட்டு, இதன் மூலம் இப்பகுதியில் மொத்தம் 22,604 விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

அதில், குடிமராமத்து திட்டத்தின்கீழ் பழனி வட்டத்திற்குட்பட்ட கலையம்புத்தூர் அணைக்கட்டு வாய்க்கால் ரூ.50.50 இலட்சம் மதிப்பீட்டிலும், நெய்க்காரப்பட்டி சக்கரைகுளம் ரூ.19.75 இலட்சம் மதிப்பீட்டிலும் பெரியகலையம்புத்தூர் உடையகுளம் ரூ.63.50 இலட்சம் மதிப்பீட்டிலும்; பழனி அதிகாரிகுளம் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், மதகுகள் புனரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்டவாறு நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பழனி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளின் நலன் கருதியும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யவும், அரசால் போர்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்;பட்டு வருகிறது. இவ்வாறாக நடைபெற்று வரும் பணிகளை விவசாயிகளும் கண்காணித்து அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழுஒத்துழைப்பு அளித்து, தங்களது பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, இளநிலை பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.விஜயமூர்த்தி, பழனி வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.