மூடு

பாரம்பரிய பூட்டுத் தொழில்களை துவங்க தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 13/12/2021

செ.வெ.எண்:-34/2021

நாள்:13.12.2021

பாரம்பரிய பூட்டுத் தொழில்களை துவங்க தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழக அரசு குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு பல்வகையான மானிய உதவிகளை வழங்கி வருகிறது.

இதன்படி, தற்போது மாநிலத்தில் நலிவுற்று வரும் பூட்டு உற்பத்தி, வெள்ளிக் கொலுசு, வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு, பித்தளைப் பொருட்கள் மற்றும் பாத்திரப் பொருட்கள் தயாரிப்பு, பட்டு உற்பத்தி சார்ந்த தொழில்கள், உப்பு தயாரிப்பு ஆகியவற்றை சிறப்பு வகை தொழில்களின்; கீழ் கொண்டு வந்து சிறப்பு முதலீட்டு மானியங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசினால் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பூட்டு உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு புவி சார் குறியீடு பெற்ற மாவட்டமாகும். எனவே பாரம்பரிய பூட்டுத்தொழில் மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி பூட்டுத்தொழில் நிறுவனங்களை துவங்கி, தமிழக அரசு வழங்கும் மானியங்களை பெற்று, திண்டு;க்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம்.

மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திண்டுக்கல் ஆகிய அலுவலகங்களை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0451-2471609, 0451-2433785) தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.