மூடு

புலம் பெயர்ந்த சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்கள் தொழில் துவங்க COVID -19 சிறப்பு நிதி உதவி

வெளியிடப்பட்ட தேதி : 28/07/2020

செ.வெ.எண்:-25/2020

நாள்:27.07.2020

திண்டுக்கல் மாவட்டம்

புலம் பெயர்ந்த சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்கள் தொழில் துவங்க COVID -19 சிறப்பு நிதி உதவி தொகுப்பு வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழக அரசு, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் நலிவுற்ற தொழில்களுக்கு ஆதரவளித்து பொருளாதாரத்தினை மேம்படுத்த COVID -19 தொகுப்பு சிறப்பு நிதி உதவிதிட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களைத் தலைவாராகக் கொண்டு இத்திட்டம் ஆத்தூர், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 148 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்திற்காக வேறு மாவட்டங்கள், வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்து COVID -19 தொற்று பாதிப்பு மற்றும் பொது ஊரடங்கு காரணமாக தற்போது சொந்தஊர் திரும்பியுள்ள தொழில் திறன் பெற்ற இளைஞர்களுக்கு சொந்த ஊரில் தொழில் துவங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் அதிகபட்சம் ரூபாய் 1இலட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது சுய உதவிக் குழுகுடும்பங்களைச் சார்ந்த, 18 வயது முதல் 35 வரையுள்ள ஆண்கள் மற்றும் 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆத்தூர், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம சொந்த ஊர் பகுதிகளில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

ஆத்தூர் வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள்; 9080623454 தொடர்பு எண்ணிலும், வத்தலகுண்டு; 6380271818, ஓட்டன்சத்திரம் 8807109510, பழனி 9384169187, கொடைக்கானல் 9698487475, வேடசந்தூர் 8807878175, குஜிலியம்பாறை 9943406766, ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட அலுவலக தொடர்பு எண் 0451-2900094 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.