போட்டித் தேர்வுகளில் பங்குகொள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தயார் செய்யும் விதமாக இலவசப் பயிற்சி வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்இ இ.ஆ.ப.இ அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-20/2022
நாள்:08.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
போட்டித் தேர்வுகளில் பங்குகொள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தயார் செய்யும் விதமாக இலவசப் பயிற்சி வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்இ இ.ஆ.ப.இ அவர்கள் தகவல்.மத்திய/மாநில அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்குகொள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தயார் செய்யும் விதமாக இலவசப் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இந்நிகழ்ச்சி தினந்தோறும் காலை 07.00 மணியிலிருந்து 09.00 வரையிலும். இதன் மறுஒளிபரப்பு இரவு 07.00 மணியிலிருந்து 09.00 வரையிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதன் தனியார் தொலைக்காட்சி விவரம்: ஏர்டெல் டிடிஎச்-821இ சன் டிடிஎச்-33இ டாடா ஸ்கை டிடிஎச்-155 மற்றும் வீடியோகான் டிடிஎச்-597. மேலும் தனியார் கேபிள் டிஏசி டிவி-200இ டிசிசிஎல்-200இ விகெ டிஜிட்டல் – 55இ அக்சயா-17 எஸ்சிவி-98 மற்றும் ஜிடிபிஎல்-99 ஆகும். எனவேஇ போட்டித் தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்இ இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திண்டுக்கல்.