மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்து தரப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-38/2021
நாள்:20.10.2021
திண்டுக்கல் மாவட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்து தரப்படும் –
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கிராம ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டை, தனியார் நிலங்களில் பலன்தரும் மரங்கள் நடுதல், மண்வரப்பு, கல்வரப்பு மற்றும் மரங்களைச் சுற்றி அகழி அமைத்தல் பணிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அமைத்து தர அரசு தயாராக உள்ளது.
இத்திட்டத்தில், இதர வகுப்பு பயனாளிகள், சிறு/குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / பழங்குடியினர் பயனாளிகளுக்கு நில உச்ச வரம்பு இல்லை.
மேலும், தகவலுக்கு 7402608067 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.