மூடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2020
gdp16320

செ.வெ.எண்:-21/2020 நாள்:16.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள்;, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (16.03.2020) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 470 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட அம்மா திட்ட முகாம், மக்கள் தொடர்பு முகாம், சிறப்பு குறைதீர்க்கும் முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக் கொண்டும், இதற்குமுன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளாக தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் பொன்னாபுரம் திரு.கு.ராமசாமி என்பவருக்கு முதல் பரிசாக ரூ.25,000, கல்துறை திரு கொ.சிவசுப்பிரமணியன் என்பவருக்கு இரண்டாவது பரிசாக ரூ.20,000, புலாம்பட்டி திரு.சி.ராணி என்பவருக்கு மூன்றாவது பரிசாக ரூ.15,000 வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திரு.ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திரு.சிவக்குமார், உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.