மூடு

மத்திய அரசின் அசோகச் சக்ரா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2019

செ.வெ.எண்:-56/2019 நாள்:-29.10.2019
திண்டுக்கல் மாவட்டம்

மத்திய அரசின் அசோகச் சக்ரா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம் சமூகநலத்துறையின் மூலம் 2020;-ஆம் ஆண்டிற்கான அசோகச் சக்ரா விருதானது வெளிப்படையான துணிச்சல் அல்லது ஒப்புயர்வற்ற வீர தீர செயல் புரிந்து சுயதியாகம் செய்தவர்களுக்கு மற்றும் அருகிலுள்ள பாதுகாப்பு பணியாளர்கள், பொது குடிமக்கள் வாழ்க்கையில் பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் உயர்ந்தவர்கள்;, காவல்படைகள், மத்திய காவல் படைகள் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படைகளில் வீர தீர செயல் புரிந்தவர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். இந்த அசோக சக்ரா விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மூலம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆட்சி;த்தலைவர் அலுவலகத்தின்; தரைதளத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தி;ல் விண்ணப்பம் பெற்று 03.11.2019-ற்குள் விண்ணபிக்கலாம். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்;ள வேண்டிய தொலைபேசி எண்.0451-2460092 என மாவட்ட

ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்