மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மண்டவாடி, அம்பிளிக்கை மற்றும் ஓடைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
செ.வெ.எண்:-66/2024
நாள்:-26.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மண்டவாடி, அம்பிளிக்கை மற்றும் ஓடைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மண்டவாடி, அம்பிளிக்கை மற்றும் ஓடைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(26.12.2024) திறந்து வைத்து, ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டவாடி ஊராட்சியில் சின்னையகவுண்டன்வலசில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நுலாகக்கட்டடம், சின்னமண்டவாடியில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், பெரியமண்டவாடியில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், அம்பிளிக்கை ஊராட்சியில் ரூ.88.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சவடம்மன் கோயில் பாலம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், மண்டவாடி ஊராட்சி, பெரியமண்டவாடியில் ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டடம், அம்பிளிக்கை ஊராட்சியில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டடம், ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், கனிம வள நிதியில் அம்பிளிக்கை ஊராட்சியில் அம்பிளிக்கை மற்றும் பூலாம்பட்டியில் தலா ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடங்கள், ஓடைப்பட்டி ஊராட்சியில், சக்கம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை மற்றும் நமக்குநாமே திட்டத்தில் ரூ.48.34 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கரிசல்காடு சிறு பாலம், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் வெங்கடாபுரத்தில் ரூ.14.69 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, ஓடைப்பட்டியில் ரூ.19.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி என மொத்தம் ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(26.12.2024) திறந்து வைத்து, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், மண்டவாடி ஊராட்சியில் ரூ.3.59 கோடி மதிப்பீட்டிலும், ஓடைப்பட்டி ஊராட்சியில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட 2.5 இலட்சம் பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டு வீடுகளை பழுதுபார்க்க ரூ.50,000, கான்கிரீட் வீடுகளை பழுதுபார்க்க ரூ.1.50 இலட்சம் வழக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 44 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 246 முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 86 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. கறுப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக 700 அரிசி அரவை ஆலைகளிலும் கலர்சாப்டர் இயந்திரம் பொருத்தப்பட்டு தரமான அரிசி உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.
விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் முதியோர் உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,200ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது, மேலும், அதிகளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் மார்ச் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்தத் திட்டம் நிறைவடைந்த பின்னர் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படாது.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், மண்டவாடி, அம்பிளிக்கை மற்றும் ஓடைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மொத்தம் ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், மண்டவாடி ஊராட்சியில் ரூ.3.59 கோடி மதிப்பீட்டிலும், ஓடைப்பட்டி ஊராட்சியில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மண்டவாடி ஊராட்சியில் மட்டும் கடந்த 44 மாதங்களில் 614 பணிகள் ரூ.21.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
விழாவில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், உதவிப்பொறியாளர் திரு.விஜயராகவன், வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜோதீஸ்வரன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம் உதவிப்பொறியாளர் திரு.பொன்னுவேல், இளநிலைப்பொறியாளர் திரு.கருப்பண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.