மூடு

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 22/11/2021
.

.

செ.வெ.எண்:-57/2021

நாள்:22.11.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், இன்று (22.11.2021) திண்டுக்கல் வனத்துறை வளாகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

தேசிய வனக்கொள்கையின்படி தமிழகத்தின் பசுமை பரப்பு மற்றும் வனப்பரப்பினை பெருக்கவும் தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போர்வைத் திட்டம் (Tamil Nadu Mission on Sustainable Green Cover in Farm lands – TNMSGCF) தமிழ்நாடு வனத்துறையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையை உருவாக்க அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நமது மாநிலம் முழுவதும் 185 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2021-2022ம் நிதி ஆண்டிற்கு இலக்காக 251700 (இரண்டு லட்சத்து ஐம்பத்து ஒன்றாயிரத்து எழுநூறு) மரக்கன்றுகள் ஒதுக்கப்பட்டு வனத்துறை மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை துறையில் ஏற்கனவே உள்ள திட்டங்களோடு இத்திட்டத்தினையும் செயல்படுத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள / ஆர்வமுள்ள வேளாண் பெருமக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலம் உழவன் செயலியில் பதிவு செய்து பயனடைய உள்ளார்கள்.

இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் விவசாயிகள் மரக்கன்றுகளை தொகுப்பு நடவு / ஊடுபயிர் நடவு / வரப்பு நடவு முறைகளில் நடவு செய்து பயனடைவார்கள். வரப்பு நடவு முறையாக ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த இத்திட்டத்தின் மூலம் நான்காண்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. SMAF திட்ட வழிகாட்டுதலின்படி ரூ.70/- தொகையில் 50மூ தொகையை (40:20:20:20) என்ற விகிதப்படி உயிர் செடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் வருட முடிவில் ரூ.14/-ம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வருடத்திற்கு ரூ. 7/- வீதமும் (3 ஆண்டுகள் ஒ ரூ. 7/- ஸ்ரீ ரூ. 21/- ) மொத்தம் ரூ.35/- கன்றுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் நமது மாவட்ட மண்ணுக்கேற்ற மரவகைகள், குறைவான தண்ணீர், தட்பவெப்ப பருவநிலைகளுக்கு ஏற்ற மரஇனங்கள், குறுகிய முடிப்பரப்பு உடைய இனங்கள், மருத்துவ குணமுடைய மரஇனங்கள் திண்டுக்கல் வனத்துறை மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாற்றுகள் பெறுவதற்கு விவசாயிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது உழவன் செயலி மூலமாக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டு அதன்படி பெயரை பதிவு செய்த விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அலுவலரின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை திண்டுக்கல் வனத்துறையின் வன விரிவாக்க மைய நாற்றங்காலில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் எதிர் காலத்தில் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகுக்கும். மேலும் மண்வளம் அதிகரித்து நமது மாவட்டத்தின் ஓட்டுமொத்த பசுமை பரப்பும், சுற்றுச்சூழலும் மேம்படும். மேலும் இத்திட்டத்தில் விளம்பர விழிப்புணர்வு பணி மூலம் விவசாயிகளுக்கு KVK வேளாண்மை பல்கலைகழக பயிற்சி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் பயிற்சியும் நேரடி களப்பயிற்சியும் (Field Visit) வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலசைசர் அவர்கள் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டில் நிரம்பாத நீர் நிலைகளே இல்லை. இயற்கை நமக்கு கைகொடுத்திருந்தாலும், தொடர்ச்சியாக, மரக்கன்றுகளை அதிமாக நடவேண்டும். காரணம் மனிதன் வாழ்வதற்கு தேவையான, காற்று, நீர், மருந்துவ பொருட்கள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தினார்கள். குறிப்பாக 40 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும், மரத்தை வளர்த்தால் நாம் வளர்வோம் என்ற நீதியை உருவாக்கி, மரக்கன்றுகள் நடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. மரகன்றுகளை நடவு செய்தால், விவாசாயித்திற்கு தேவையான மழை, மாசற்ற காற்று உருவாக வாய்ப்புகள் உள்ளது. எவ்வளவு காடுகள் அடர்த்தியாக இருக்கிறதோ, அதற்கேற்ற மழை நமக்கு கிடைக்கும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை தொடர்ச்சியாக, செயல்படுத்தப்பட்டு வருகிறார்கள். அனைத்து பொதுமக்களும் இத்திட்டத்தில் பங்குபெற வேண்டும். வறட்சியில் வளரக்கூடிய மரக்கன்றுகளை அதிகமாக நட்டு, அந்த வறட்சியை போக்குவதற்கு நாம் அனைவரும் பங்கு பெற வேண்டும்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,50,000-க்கும் அதிகமான மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பான திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பசுமை போர்வை திட்டம், எதிர்காலத்தில் தமிழகத்தை இந்திய திருநாட்டில் ஒரு தலைசிறந்த மாநிலமாக, மாசற்ற மாநிலமாக, நச்சு காற்று இல்லாத மாநிலமாக, எதிர் காலத்தில் விவசாயிகள் வளமோடு இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சிக்கு வரும் போது, மரக்கன்றுகள் நடுவதற்கு ஏதுவாக சிறந்த திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்;டத்தில் உள்ள விவசாயிகள், வறட்சியை போக்கும் நோக்கத்தோடு, அனைத்து விவசாயிகளுக்கும், இலவசமாக மரக்கன்றுகள் வழங்குவதற்கு வனத்துறையும், வேளாண்மைத்துறையும் இணைந்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் முத்தமிழ் அறிஞர் ;டாக்டர் கலைஞர் அவர்கள் கோடிக்கணக்கான மரங்கன்றுகளை நடவு செய்து, தமிழகம் முழுவதும் சிறந்த சூழ்நிலைகளை உருவாக்கினார்கள். அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட வன அலுவலர் திரு.செ.பிரபு,இ.வ.ப., திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் திரு.எஸ்.பாண்டித்துறை, வேளாண்மை துணை இயக்குநர்கள் திருமதி.சி.அமலா, திரு.பெ.ரவிபாரதி, வன விரிவாக்க அலுவலர் திரு.டி.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.