மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை இன்று(04.01.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் பயனாளிகளுக்கு வழங்கி, துவக்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 04/01/2022
.

..

செ.வெ.எண்:-08/2022

நாள்:04.01.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை இன்று(04.01.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் பயனாளிகளுக்கு வழங்கி, துவக்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கள் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அய்யம்பாளையம் பேரூராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி, துவக்கி வைத்தார்கள்.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(04.01.2022) பயனாளிகளுக்கு வழங்கி, துவக்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று அய்யம்பாளையம் பேரூராட்சியில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலை, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அய்யம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை தொடர்பான தொழில்களுக்கு நடைமுறை மூலதனக்கடன் வழங்கி தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,035 நியாயவிலைக் கடைகள் மூலம் மொத்தம் 6,69,440 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ரூ.538 மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு அந்தந்த நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் தெரு வாரியாக சுழற்சிமுறையில் (Staggering System) நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பரிசு தொகுப்பு வழங்குவதற்கு முன்னதாகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் நெரிசலை தவிர்த்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 0451-2460097 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு அலுவலக வேலைநாளில் வேலை நேரத்தில் புகார்கள் அளிக்கலாம்.

மேலும், அய்யம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை தொடர்பான தொழில்களுக்கு நடைமுறை மூலதனக்கடன் இன்றையதினம் 25 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12.78 இலட்சம் மதிப்பில் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.வீ.பழனிகுமார், கூட்டுறவு துணைப்பதிவாளர்(பொதுவிநியோக திட்டம்) திரு.திருமாவளவன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி எம்.மகேஸ்வர் முருகேசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திரு.செல்வக்குமார், கூட்டுறவு சார் பதிவாளர்கள் திரு.அன்பரசு, திரு.வினோத், அய்யம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திரு.முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.