மூடு

மாநில அளவில் அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு சென்னையில் 03-03-2022 அன்று நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 28/02/2022

செ.வெ.எண்:-51/2022

நாள்:25.02.2022

மாநில அளவில் அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு சென்னையில் 03-03-2022 அன்று நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2021-22ம் ஆண்டிற்கான அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் இருபாலருக்கும் 09-03-2022 முதல் 14-03-2022 வரை லேக் ஸ்போட்ஸ் காம்ப்ளக்ஸ், சண்டிகரில் நடைபெற உள்ளது.

மேற்காணும் போட்டியில் கலந்து கொள்வதற்கான தமிழ்நாடு மாநில அளவிலான தேர்வு 03-03-2022 அன்று சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழக அணிக்காக தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். விருப்பம் உள்ளவர்கள் 03-03-2022 அன்று தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம். பயணப்படி மற்றும் தினப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படமாட்டாது.

அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெறலாம். (GPF or CPS No கட்டாயம் இருக்க வேண்டும்.). இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. சீருடை பணியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்க இயலாது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் அலுவலக அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும். கலந்து கொள்ள செல்பவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கடைசியாக தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்- 624004 என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்:- 0451-2461162-ல் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.