மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.09.2019 வெள்ளி கிழமை அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2019

செ.வெ.எண்:-34/2019 நாள்:- 16.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.09.2019 வெள்ளி கிழமை அன்று நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவர்கள் 20.09.2019 வெள்ளி கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்;ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக மாவட்டஆட்சித்தலைவர் அவர்களிடம் அளிக்கலாம். இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்; மாற்றுத்திறனாளிகள் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனுக்கள் அளிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்