மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சிறப்பு முயற்சியில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க 1,212 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.27 கோடி அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2022

செ.வெ.எண்:-48/2022

நாள்: 25.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சிறப்பு முயற்சியில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க 1,212 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.27 கோடி அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வெளியிட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்(03.12.2021) வாழ்த்துச் செய்தியில், “மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமாக “RIGHTS” என்ற திட்டம் ரூ.1,709 கோடி செலவில் திட்டமிடப்பட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களால் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உயர்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து அவர்களின் வாழ்வு செழிக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும். பல்வேறு வகையான குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளின் ஆக்கப்பூர்வமான திறன்களை கண்டறிந்து, அதனை வெளிப்படுத்தி, இந்தச் சமுதாய முன்னேற்றத்திற்கு அவர்கள் உதவ, நாம் வாய்ப்பு வழங்குவோம், அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவோம்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள், உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரவண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபயிலும் வண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022ம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சுமார் 8,446 பயனாளிகளுக்கு ரூ.13.71 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 39,488 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 7,080 மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.1,500 பெற்று பயனடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதற்கிணங்க மாதம் ரூ.500 வீதம் உயர்த்தப்பட்டு, ஜனவரி-2022 மாதம் முதல் ரூ.2,000 மாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள், உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 12,000-த்திற்கு மேல் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு உதவிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் 14,987 நபர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி, 12,415 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பினமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களின் சிறப்பு முயற்சியில், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கும் திட்டம் 2021-2022ல் செயல்படுத்தப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுத்துறை, மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கிட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பேரில் மளிகைக்கடை, பெட்டிக்கடை, மாடு வளர்த்தல் போன்ற சிறு, குறு தொழில்கடன் 1,212 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.27 கோடி அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் பயனடைந்தவர்களில் ஆத்துார் தொகுதியில் 154 நபர்கள், திண்டுக்கல் தொகுதியில் 487 நபர்கள், நத்தம் தொகுதியில் 163 நபர்ள், நிலக்கோட்டை தொகுதியில் 143 நபர்கள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 39 நபர்கள், பழனி தொகுதியில் 93 நபர்கள், வேடசந்துார் தொகுதியில் 127 நபர்கள், கொடைக்கானல் பகுதியில் 6 நபர்கள் என 1,212 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.27 கோடி அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டு, பயனடைந்துள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.