மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசுஅலுவலர்கள் உறுதிமொழி

வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024

p class=”text-justify”>செ.வெ.எண்:-76/2024 நாள்:-27.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா தினத்தை முன்னிட்டு,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா தினம் (பாதுகாப்பான குழந்தை பருவம், பாதுகாப்பான இந்தியா) உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.11.2024) நடைபெற்றது.

மகளிர் சுய உதவிக்குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / வட்டார அளவிலான கூட்டமைப்பு / வட்டார இயக்க மேலாண்மை அலகு / மாவட்ட இயக்க மேலாண்மை ஆகிய நாங்கள் ”எங்களது பகுதியிலோ அல்லது சமூகத்திலோ ”குழந்தை திருமணம்” நடைபெறுவதை தெரியவந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும், எங்களது சுற்றுப்புறத்திலும், சமூகத்திலும், எந்தவொரு குழந்தைக்கும் திருமணம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வேன் எனவும், எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்று அநீதிகளுக்கு எதிராக தொடந்து குரல் கொடுப்பேன் எனவும், குழந்தைகளின் பாதுகாப்பிற்க்காகவும், தடையற்ற கல்விக்காகவும் தொடர்ந்து செயல்படுவேன் எனவும் உளமார உறுதி அளிக்கிறேன்.” என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா தினம் உறுதிமொழியினை வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு.சதீஸ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி புஷ்பகலா மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.