மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்ற காய்ச்சல் விழிப்புணர்வு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2021
.

.

செ.வெ.எண்:-29/2021

நாள்:13.11.2021

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்ற காய்ச்சல் விழிப்புணர்வு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.11.2021) ஆத்தூர் வட்டம், செம்பட்டி பேருந்து நிலைய பகுதியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்ற வரும் காய்ச்சல் விழிப்புணர்வு முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாநகராட்சி உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 30 மருத்துவ குழுவினரால் இன்று (13.11.2021) காய்ச்சல் விழிப்புணர்வு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 30 மருத்துவ குழுக்களில் தலா ஒவ்வொரு மருத்துவக்குழுவினரும் 3 முதல் 5 இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து, தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குகிறார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் ஆத்தூர் வட்டம், செம்பட்டி பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் விழிப்புணர்வு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், ஆதிலெட்சுபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் வருகை பதிவேடுகள், மதிய உணவு சமைக்கும் பணிகளையும், உணவு பொருட்களின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின், போது செம்பட்;டி வட்டார மருத்துவ அலுவலர் திரு.கே.எஸ்.வினோத், திரு.எஸ்.டி.பரத்கண்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்