மூடு

மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2022

செ.வெ.எண்:-21/2022

நாள்:12.02.2022

மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி, நேரடித்தேர்தல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 3 நகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 23 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மொத்தம் 363 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 486 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வாக்குச்சாவடியில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். வட்டார பார்வையாளர்கள் வளைவு, மின வசதி, கழிப்பறை, கூரை, கதவு, ஜன்னல், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடியில் சிசிடிவி அல்லது லைவ் வெப் ஸ்ட்ரீமிங் நிறுவப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும். தேர்தல் பொருட்கள் மற்றும் வாக்கெடுப்பு நாள் ஏற்பாடுகளை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

தபால் வாக்குச் சீட்டின் நிலை (படிவம் 15 பெறப்பட்ட எண் மற்றும் தபால் வாக்கு விநியோகத்தின் எண்ணிக்கை). துணை நிலை -2 வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் விவரங்கள் அறிக்கை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 3வது சுழற்சி முறை ஒதுக்கீடு(சுயனெழஅணையவழைn) உறுதிப்படுத்தல் மற்றும் அரசியல் கட்சிக்கு வழங்கப்பட்ட நகல். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் அமைப்பு மற்றும் ஏற்பாடுகளின் நிலை, வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் நிலை. வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாகன அனுமதி தொடர்பான ஏதேனும் சிக்கல்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளருடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளுதல், வேட்பாளர், தேர்தல் முகவர் மற்றும் வாக்குச் சாவடி முகவர் ஆகியோரின் நிலை, வழங்கப்பட்ட அட்டை விவரங்கள், நகர்ப்புறங்களில் தேர்தல் விழிப்புணர்வு செயல்பாடுகள், கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பூத் அலுவலர்கள் நியமனம் மற்றும் பூத்சிலிப் விநியோகம், தன்னார்வ தொண்டர்கள் நியமனம் மற்றும் நிறைவுப் பயிற்சி, பறக்கும் படையினரின் தினசரி செயல்பாடுகள், மண்டல குழு செயல்பாடுகளை கண்காணித்தல், வாக்கு எண்ணும் பணியாளர்கள் நியமனம் மற்றும் எண்ணும் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டம் ஆகியவை குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சி.மாறன், வருவாய் கோட்டாட்சியர்கள் திண்டுக்கல் திருமதி ம.காசிச்செல்வி, பழனி திரு.சிவக்குமார், கொடைக்கானல் திரு.ச.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி உட்பட தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.