மூடு

முன்னாள் படைவீரர்களுக்கான சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 20/07/2021

செ.வெ.எண்:36/2021

நாள்:19.07.2021

முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களின் சிறார்களுக்கு 2021-2022-ம் கல்வியாண்டிற்கான முன்னாள் படைவீரர்களுக்கான சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களின் சிறார்களுக்கு 2021-2022-ம் கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி, மருத்துவம், தொழிலிநுட்பம், பட்டயப்படிப்பு மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலிருந்து முன்னாள் படைவீரர்களுக்கான சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது.

எனவே, 2021-22-ம் கல்வி ஆண்டிற்கு விண்ணப்பிக்கும் போது முன்னாள் படைவீரர்களுக்கான சார்ந்தோர் சான்றினை இவ்வலுவலகத்தில் புதிதாக பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றினை பயன்படுத்தக் கூடாது.

மேலும், இவ்வலுவலகத்திற்கு சார்ந்தோர் சான்று பெற வரும் முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, PPO Copy, முன்னாள் படைவீரரது பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் 12-ம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ் நகல் கொண்டு வரவேண்டும்.

மேலும், தகவல்களுக்கு திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலக 0451-2460086 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.