மூடு

மேட்டுப்பட்டியில் இயங்கி வந்த மாவட்டக் கருவூலம், இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2021

செ.வெ.எண்:-65/2021

நாள்:24.11.2021

மேட்டுப்பட்டியில் இயங்கி வந்த மாவட்டக் கருவூலம், இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இயங்கி வந்த மாவட்டக் கருவூலம், தற்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடத்தில் “மாவட்டக் கருவூலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் – 624 004” என்ற முகவரியில் மாற்றம் செய்யப்பட்டு, 22.11.2021 முதல் இயங்கி வருகிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மேற்கண்ட அலுவலகத்தில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.