மூடு

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்க/ நீக்கம் செய்ய/ வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2021
.

செ.வெ.எண்:-74/2021

நாள்:27.11.2021

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்க/ நீக்கம் செய்ய/ வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க /வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களை திருத்தம்ஃமுகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் ஆட்சேபணைகள் ஏதேனுமிருப்பின் அதனை உரிய படிவங்களில் நேரில் அளிப்பதற்காக வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று(27.11.2021) வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு, தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க /வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்கள் திருத்தம் /முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் ஆட்சேபணைகள் ஏதேனுமிருப்பின் அதனை உரிய படிவங்களில் நேரில் அளிப்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில், வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 31.12.2003-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் – 6, நீக்கம் செய்வதற்கு படிவம் – 7, பிழைதிருத்தம் செய்வதற்கு படிவம் – 8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் – 8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர், பெயர் சேர்க்க படிவம்-6ஏ ஆகிய படிவங்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளம் www.nvsp.in மூலமாகவும், ”Voters Help Line” என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்து முடிவு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2022-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(27.11.2021) சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நாளையும்(28.11.2021) ஞாயிற்றுக் கிழமை வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக்கொள்ளவும், புதிதாக சேர்க்க விரும்புவர்கள் /நீக்கம் செய்ய விரும்புபவர்கள் /வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.