மூடு

வாக்காளர் பட்டியலில் வாக்காளர் விபரங்களை சரிபார்த்துக் கொள்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 04/09/2019

செ.வெ.எண்:06/2019 நாள்:04.09.2019

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியலில் வாக்காளர் விபரங்களை சரிபார்த்துக் கொள்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வதற்காக 01.09.2019-ஆம் தேதி முதல் 30.09.2019-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில், மத்திய அரசின் Digital Seva மற்றும் மாவட்ட மின் ஆளுமை முகமை அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் பொது சேவை மையங்கள் (Common Service Centre), தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை(220) மையங்களில் பொதுமக்கள் விபரங்களை சரிபார்த்துக்கொள்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர் பட்டியல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்ஃஅனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்ஃஅனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.