மூடு

விடுதலைப்போராட்ட வீரர் கோபால்நாயக்கர் அவர்களின் 218-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட தேதி : 05/09/2019
1

செ.வெ.எண்:-08/2019 நாள்:05.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

விடுதலைப்போராட்ட வீரர் கோபால்நாயக்கர் அவர்களின் 218-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, விடுதலைப்போராட்ட வீரர் கோபால்நாயக்கர் மணிமண்டபத்தில் அவர்களின் 218-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (05.09.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள், விடுதலைப்போராட்ட வீரர் கோபால்நாயக்கர் அவர்களின் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர். இவர் சிவகங்கை ராணி வேல்நாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பையும், படை பலத்தையும் வழங்கியவர். மேலும் வெள்ளையருக்கு எதிரான போரில் மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கு துணையாக இருந்தவர். மேலும், கடந்த 05.09.1801ம் ஆண்டு, நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த கோபால்நாயக்கர் அவர்களின் நினைவாக விருப்பாட்சியில் ரூ.69 இலட்சம் மதிப்பீட்டில் அவர்களின் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டம் கட்டப்பட்டு, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களால் கடந்த 20.02.2013 அன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்சான்றோர்கள், விடுதலைப்போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அன்னார்களது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, விழா கொண்டாடும் பொருட்டு, கடந்த 14.07.2017 அன்று சட்டப்பேரவையில் 2017-18ம் நிதியாண்டிற்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, நமது திண்டுக்கல் மாவட்டத்தில் விருப்பாட்சியில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப்போராட்ட வீரர் கோபால்நாயக்கர் அவர்களின் நினைவு தினமான இன்று அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விடுதலைப்போராட்ட வீரர் அவர்களின் மணிமண்டபத்திற்கு வருகைபுரிந்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழச்சியில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பா.வேலுசாமி, பழனி சார் ஆட்சியர் திருமதி சு.உமா, இ.ஆ.ப., முன்னாள் வேளாண் விற்பனை குழு வாரியத் தலைவர் திரு. பாலசுப்பிரமணி, திரு. உதயம் ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சரவணன் மற்றும் ஏராளமான பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.