மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2022

செ.வெ.எண்:-37/2022

நாள்:21.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் 25.03.2022 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது –மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.03.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக்கூடத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வுகாண உள்ளார்கள்.

அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்து கொள்ளவும், தனிநபர் இடைவெளியும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.