மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2022
.

செ.வெ.எண்:-51/2022

நாள்:27.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்தி, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடியாகும் பல்வேறு பயிர்களுக்கு, கால்நடை வளர்ப்புக்கு மற்றும் மீன் வளர்ப்புக்கு தேவையான கடன் அளவு, கடன் வழங்கும் காலம் மற்றும் தவணை காலம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை சுட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயன்பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் விவசாயிகளுக்கு வரப்பு கட்டுதல் மற்றும் பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.பெ.ரவிபாரதி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு) திரு.கோபி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்;, திண்டுக்கல்.