மூடு

வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி, பொதுமக்கள் பார்வைக்காக அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 09.02.2022 அன்று காலை 10 மணி முதல் மாலை 6.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2022

செ.வெ.எண்:-15/2022

நாள்:08.02.2022

வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி, பொதுமக்கள் பார்வைக்காக அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 09.02.2022 அன்று காலை 10 மணி முதல் மாலை 6.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. அந்த ஊர்திகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பொதுமக்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்திட ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 09.02.2022 அன்று வருகை தரவுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் அலங்கார ஊர்தி, கொடைக்கானல் கொடைக்கானல் காட்ரோடு பைபாஸ், வத்தலகுண்டு ஈடர்ன் கார்டன், செம்பட்டி – பழனி பைபாஸ், திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகில் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக 09.02.2022 காலை 10 மணி முதல் மாலை 6.00 மணி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்த அலங்கார வாகனத்தை பார்வையிட வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், நாட்டுப்;பற்றினை எடுத்துரைக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்;ச்சிகள் மேற்கொண்டு பொதுமக்கள் இந்த அலங்கார ஊர்தியை சிறப்பான முறையில் கண்டுகளிக்கத் தேவையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.