மூடு

வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி திண்டுக்கல் வருகை – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் மலர்கள் தூவி வரவேற்று, பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2022
.

...

செ.வெ.எண்:-17/2022

நாள்:09.02.2022

வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி திண்டுக்கல் வருகை – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் மலர்கள் தூவி வரவேற்று, பார்வையிட்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் “விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்திகள் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்றும் அறிவித்தார்கள்.

அதன்படி, இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பொதுமக்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்திட ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று(09.02.2022) வருகை தந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அலங்கார ஊர்தி, கொடைக்கானல் கொடைக்கானல் காட்ரோடு பைபாஸ், வத்தலகுண்டு ஈடர்ன் கார்டன், செம்பட்டி – பழனி பைபாஸ், திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகில் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் இன்று(09.02.2022) வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை மலர்கள் தூவி வரவேற்று, பார்வையிட்டார்கள்.

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியின் முகப்பில் தமிழகத்தின் வேலூர் கோட்டையில் 1805-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கினை அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த விராங்கனை குயிலி, பரங்கியரின் ஆதிக்கத்திற்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்ததோடு ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய்ப் போரிட்டுத் தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி

மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படைகளை தனியாகச் சென்று அழித்த நெற்கட்டும் செவல் பிறப்பிடமாகக் கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன்முதலாக வீர முழக்கமிட்ட நெற்கூட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய் போரிட்டு, தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் மருது சகோதர்கள் உருவாக்கிய காளையார் கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,

அதனைத்தொடர்ந்து, வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப,. அவர்கள் மலர்கள் தூவி பார்வையிட்டார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி, திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று(09.02.2022) காலை 10 மணி முதல் மாலை 6.00 மணி வரை காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த அலங்கார வாகனத்தை பார்வையிட வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், நாட்டுப்;பற்றினை எடுத்துரைக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்;ச்சிகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப,. அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், உதவி ஆட்சியர்(பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.மு.பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, வட்டாட்சியர்கள் திண்டுக்கல் மேற்கு திரு.ரமேஷ்பாபு, திண்டுக்கல் கிழக்கு திரு.சந்தனமேரி கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள். மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.