மூடு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பயன்படுத்தி மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளலாம்

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2021

செ.வெ.எண்:-26/2021

நாள்:09.12.2021

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பயன்படுத்தி மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 02.12.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 01.03.2021-க்குள் இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 01.03.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.