மூடு

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2024
.

செ.வெ.எண்:-83/2024

நாள்: 29.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.08.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரித்தல், செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிப் பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவுரை வழங்கப்பட்டது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களான, வைக்கோல் கட்டும் கருவி, துளையிடும் கருவி, விதையிடும் கருவி, தென்னை மட்டை துாளாக்கும் கருவி, வைக்கோல் கூட்டும் கருவி மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தனியார் இயந்திர நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் உழுவை இயந்திரங்களுக்கு பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.ராஜா, மதுரை கண்காணிப்புப் பொறியாளர்(வே.பொ). திரு.மு.ச.பு.சங்கர்ராஜ், செயற்பொறியாளர்(வே.பொ), திரு.தி.ராஜா, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் திரு.இள.மாயக்கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர், திரு.கோ.காந்திநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திரு.ராமராஜ், உதவிசெயற்பொறியாளர்(வே.பொ)கள் திரு.கா.சிவகுமார், திரு.கண்ணதேவன், வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி/ இளநிலைபொறியாளர்(வே.பொ)கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், ஆர்விஎஸ் கல்லூரி, எஸ்ஆர்எஸ் கல்லூரி, காந்திகிராம விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயக் கல்வி படிக்கும் ஆத்தூர், ந.பஞ்சம்பட்டி பள்ளி மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.