மூடு

தமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

துறையி்ன் பெயர் – தமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பதவி – மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
தொலைபேசி எண் – 0451 – 2461868

தமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது நீா் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்ட விதி 1974, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்ட விதி 1981 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதி 1986 ஆகியவற்றினை அமல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொழிற்சாலையும் நீா் மற்றும் காற்று சட்ட விதிகளின்படி, நிறுவுவதற்கான மற்றும் இயக்குவதற்கான இசைவாணையைப் பெற வேண்டும். தொழிற்சாலைகள் மாசுபடுத்தும் தன்மையைப் பொருத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளை என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, வெள்ளை வகையை சார்ந்த தொழிற்சாலைகள் வாரிய இசைவாணை பெற அவசியம் இல்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், பேப்பா் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சாயத் தொழிற்சாலைகள், கல் உடைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியன முக்கிய தொழிற்சாலைகள் ஆகும். இத் தொழிற்சாலைகள் வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரை சுத்திகரிப்பு மேற்கொள்ள ஒரு பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் பிப்ரவரி 1997-ல் இருந்து இயங்கி வருகிறது. தற்சமயம், 49 தோல் தொழிற்சாலைகள் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் உறுப்பினராக உள்ளன.

கொடைக்கானல் பகுதியில் இயங்கி வரும் தங்கும் விடுதிகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரை சுத்திகரிப்பு மேற்கொள்ள ஒரு பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அக்டோபா் 1999-ல் இருந்து இயங்கி வருகிறது. தற்சமயம், 35 தங்கும் விடுதிகள் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் உறுப்பினராக உள்ளன.

இம்மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரங்களான அமராவதி ஆறு மற்றும் கொடைக்கானல் ஏரியிலிருந்து மாதந்தோறும் நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றன

இம்மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாரிய இசைவைப் பெற்று உள்ளன. இம்மருத்துவமனைகளிலிருந்து வெளிவரும் மருத்துவக் கழிவுகள் விருதுநகா் மாவட்டத்தில் இயங்கி வரும் பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.

இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலிருந்து வெளிவரும் நகா்புறத் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுத்திகரிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலைகளுக்கு இணையதளம் மூலம் மட்டுமே இசைவாணை வழங்குகிறது. தொழிற்சாலைகள், வாரியத்தின் இசைவாணையைப் பெற tnocmms.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து இசைவாணையைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் குறைகளை www.pcbolgprs.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,
திண்டுக்கல்.