மூடு

பொது (தேர்தல்கள்) துறை

பாராளுமன்றத் தொகுதி பற்றிய விவரங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒரு தனித் தொகுதியுடன்  (நிலக்கோட்டை) ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

22 திண்டுக்கல் பாராளுமன்ற  தொகுதி, கீழ்க்குறித்த 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

  1. 127-பழனி சட்டமன்ற தொகுதி
  2. 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி
  3. 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி
  4. 130-நிலக்கோட்டை (தனி)  சட்டமன்ற தொகுதி
  5. 131-நத்தம் சட்டமன்ற தொகுதி
  6. 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு சட்டமன்ற தொகுதியான 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 23- கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டதாகும்.

 

இம்மாவட்டத்தில் 2115 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 51 வாக்குச்சாவடிகள் ‘மிக முக்கியனானது’ எனவும், 142 வாக்குச்சாவடிகள் ‘பாதிப்பு ஏற்படுத்தப்படுத்தக்கூடியது ‘ எனவும் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 16 பகுதிகள் முற்றிலும் தொலைத் தொடர்பு இல்லாத பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொலைத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக நடந்து கொண்டே பேசும் கருவியுடன் (வாக்கி டாக்கி) காவல்துறை அலுவலர்கள் தேர்தல் நடைபெறும்  காலத்தில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

 

127-பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் வட்டத்தில், வெள்ளகவி பெரியூர் , சின்னூர் மற்றும் மஞ்சம்பட்டி ஆகிய 4 இடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளும், 131-நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ந.மலையூர் மற்றும் .லி.மலையூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 6 வாக்குச்சாவடிகள் எளிதில் சென்றடைவதற்கு சிரமமான வாக்குச்சாவடிகள்  என இனங்கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு, வாக்குச்சாவடி அலுவலர்கள் பயணம் செய்வதற்கும் தேர்தல் நடத்த தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் பொருட்களை குதிரை மூலமாகவும் கொண்டு செல்வதற்கு சரியான முன்னேற்பாடுகள் தேர்தல் நடைபெறும் சமயத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

 

 இப்பகுதியை பற்றி நன்கு அறிந்த வன மற்றும் காவல்துறை அலுவலர்களின் உதவியுடன்  இப்பணி நல்லமுறையில் செயல்படுத்த்ப்பட்டு வருகிறது. முறையான தேர்தல் விழிப்புணர்வு செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமுதாயத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும், தேர்தல் விழிப்புணர்வு எளிய முறையில் தெளிவான் வகையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஒதுக்கப்பட்ட மக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று,  எதிர்வரும் தேர்தலில் பங்கேற்க தேவையான விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு ஏற்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி அளவிலான விழிப்புணர்வு குழுக்களுக்கு பதிலாக ஏற்படுத்தப்படுள்ள தேர்தல் கல்வி பள்ளிகள், வாக்குப்பதிவினை அதிகரிக்க வீடு தோறும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த்ப்படுகிறது.

 

மேலும், தேர்தல் கல்வி பள்ளிகள் முக்கியமாக நெறிமுறையான முறையில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகளவில் பயன்படுத்த்படுகின்றன.